திருமதி. பாலரூபன் சகுந்தலா

(இளைப்பாறிய HNB அலுவலகர்)

பாலரூபன் சகுந்தலா

தோற்றம்: 03 ஜூன் 1956 - மறைவு: 26 ஜூலை 2024

யாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலரூபன் சகுந்தலா அவர்கள் 26-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அ.க.வேலுப்பிள்ளை-பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்-சதாரூபாவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

பாலரூபன் (இளைப்பாறிய HNB கடன் பகுதி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மனுவித்தியா, ரதிப்பிரியா, கௌரிநந்தன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,

கேவன், பாலவினோதன் ஆகியோரின் மாமியாரும்,

ஆர்யா, ஆரபி, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், சரோஜினி தேவி, கனகசுந்தரம், விக்னராஜா, சரஸ்வதி, சிறீதரன், காலஞ்சென்றவர்களான சதானந்தன், யோகேஸ்வரி மற்றும் வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 27-07-2024 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 11.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/07/2024 04:00)