திருமதி பாலசிங்கம் தையல்நாயகி
தோற்றம்: 15 மார்ச் 1934 - மறைவு: 29 ஆகஸ்ட் 2020
யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் தையல்நாயகி அவர்கள் 29-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தப்பிள்ளை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
இலட்சுமணன் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(வேம்படி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, காமாட்சி, வேலுப்பிள்ளை, பொன்னம்மா, பரமசிவம், சிவசுப்பிரமணியம் மற்றும் பாலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகநாயகி, சோதியாம்பாள், காலஞ்சென்ற உருத்திரக்குமார், மேனகை, விமலாதேவி, சிறிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாபரமூர்த்தி, காலஞ்சென்ற சிவநாதசிவம், கிறிஸ்ரினா, மகேந்திரம், தவராஜா, விநோராதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கூமாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Address:-
இல. 125, பிரதான வீதி, கூமாங்குளம், வவுனியா
தொடர்புகளுக்கு:-
தேவி - மகள் Phone : +94 24 205 1558
சிறிதரன் - மகன் Mobile : +1 416 696 0288 Mobile : +1 416 890 6236
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/08/2020 08:51)
