திருமதி. பாலசிங்கம் தேவமனோரஞ்சிதம்

பாலசிங்கம் தேவமனோரஞ்சிதம்

மறைவு: 22 ஏப்ரல் 2024

யாழ். காரைநகர் சம்பந்தர் கண்டியை பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காடு, கொக்குவில் பூநாறி மரத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பாலசிங்கம் தேவமனோரஞ்சிதம் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காரைநகர் சிவன்கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு- தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
 
களபூமி விளானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் (வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

யதுகுலன் (யாழ்ப்பாணம்), ஆரணி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிமலதீபன் (லண்டன்) அவர்களின் அன்பு மாமியும்,

கமலாம்பிகை (யாழ்ப்பாணம்), அமிர்தாம்பிகை (லண்டன்), யோகேஸ்வரி,(லண்டன்), கதிர்காமநாதன் (இத்தாலி), சிவசோதிநாதன் (கனடா), தயாநிதி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற மனோன்மணி, விமலாதேவி (ஓய்வுபெற்ற இலங்கை தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்), காலஞ்சென்றவர்களான இந்திராதேவி (அடம்பன் பாடசாலை அதிபர்), தர்மராசா (கஜபதி போட்டோ - வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
 
அன்னாரின் ஈமக்கிரியைகள் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இல- 54/17 பூநாறி 4வது ஒழுங்கை, கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் காலை 8.00 மணியளவில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் புகழ் உடல் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2024 04:00)