திருமதி. பாலசிங்கம் புஸ்பராணி (சிவகிளி)
மறைவு: 05 ஆகஸ்ட் 2025
யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி மேற்கு புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் புஸ்பராணி அவர்கள் 05-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - வள்ளியம்மை தம்பதியினரின் மகளும், மாரிமுத்து - தங்கமுத்து தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற யோகம்மா, சிவயோகம் (கனடா) காலஞ்சென்றவர்களான தர்மகுணசிங்கம், தர்மராஜா, மற்றும் வர்ணகுலசிங்கம் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னத்துரை, பாலர், முத்தாச்சி. பரிமளம் மற்றும் பாக்கியம் ஆகியோரின் அன்புச் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-08-2025 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது சரவணை பூர்வீக இல்லத்தில் நடைபெற்று, உடலம் சரவனை புன்னங்கண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
