Mrs. Balasingham Saraswathy

Balasingham Saraswathy

Date of Birth: 11 August 1930 - Deceased: 28 March 2025

யாழ். காரைநகர் கதிர்காம சாமிகோவிலடியை பிறப்பிடமாகவும், சீனியர் லேன் கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் சரஸ்வதி அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்  (முன்னாள் புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராமச்சந்திரன், மகேஸ்வரி, செல்வநாயகம், விஸ்வலிங்கம், நடராசா, தேவராசா, அருட்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வநாயகி (முன்னாள் ஆசிரியை - காரைநகர் இந்துக் கல்லூரி), அம்பிகாதேவி (பதவி நிலை உத்தியோகத்தர் - தமிழ்த்துறை யாழ் பல்கலைக்கழகம்), காலஞ்சென்ற கமலநாயகி (முன்னாள் சுருக்கெழுத்தாளர் - நீதிமன்றம்,ஊர்காவற்றுறை), ஆனந்தகுமார் (பிரான்ஸ்), காலஞ்சென்ற நடனகுமார், வசந்தநாயகி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற துரைராசசிங்கம் (பிரான்ஸ்), இராசரத்தினம் (பிரான்ஸ்), கலாவதி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜிஸ்லன் - சுவாதி (பிரான்ஸ்), இயன், பாரதி (பிரான்ஸ்), றஞ்சன்குமார் (பிரான்ஸ்) துளசி, பவித்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பேத்தியும்,

ஆதாம் (பிரான்ஸ்) பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

இல-40/9, சீனியர் லேன்,

கலட்டி, யாழ்ப்பாணம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2025 04:00)