Mr. Balasritharan Rajaratnam

Balasritharan Rajaratnam

Date of Birth: 28 July 1977 - Deceased: 10 November 2024

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலஸ்ரீதரன் இராஜரட்ணம் அவர்கள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராஜரட்ணம்-செல்லமணி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மரியதாஸ்-இந்திரதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

டிலானி சரோமா அவர்களின் அன்புக் கணவரும்,

அழகேசன் (தனுஷியன்), இந்துமதி (ஜெஸ்மினா), போல் அன்றூ , இமல்டா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஹெபிக்‌ஷா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம், ஜமுனா, கணேசலிங்கம் (ரஞ்சன்), மீனா, மதியழகன், விசயா, வளர்மதி (பாமா), கிருபாகரன், ரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவராசா, பரமேஸ்வரன், மனோகரன், சிவானந்தலிங்கம், செல்லபாக்கியம், காந்தா, யாழினி, சுனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டானிகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை 9:00 - 12:00 வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து பிற்பகல் 2:00 மணி வரை Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2024 05:00)