திரு. பாலசுப்ரமணிய குருக்கள் லக்ஷ்மண குருக்கள்
(பலாங்கொடை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில், பதுளை மாணிக்க விநாயகர் ஆலயம், இரத்னபுரி சிவன் கோவில் பிரதம குருவாகவும் தற்போது புசல்லாவை கதிர் வேலாயுத கோவில் பிரதம குரு)
மறைவு: 29 செப்டம்பர் 2026
யாழ்.மாவட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலைப் பிறப்பிடமாகவும், புஸ்ஸல்லாவையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பாலசுப்ரமணிய குருக்கள் லக்ஷ்மண குருக்கள் அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2:50 மணியளவில் புஸ்ஸல்லாவயில் இயற்கை எய்தினார்
தெய்வத்திரு பாலசுப்ரமணிய குருக்கள் (யாழ் வட்டுக்கோட்டை வீர பத்திரர் சிவன் கோவில் முன்னாள் பிரதம குரு) - சேதுபதி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஆனந்தவள்ளி அவர்களின் அன்பு கணவரும்,
சக்தி தர குருக்கள், சக்தி ஹர சர்மா (கோகுல்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
வைஷ்ணவி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-09-2026 புதன்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கம்பளை Thusitha Funerals (27D Hospital Rd, Gampola) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 01-10-2026 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் குட்டி பிள்ளையார் கோவில், பன்னாலை, தெல்லிப்பளையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளை தொடர்ந்து முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் அளவெட்டி கேணிப்பெட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சக்தி தர குருக்கள்:- +94 71 060 0038
கோகுல்:- +94 77 477 8886
வைஷ்னவி:- +94 77 727 1981
www.tamilthakaval.org
