திருமதி. பாலசுப்பிரமணியம் முத்துலட்சுமி (சிந்து)

பாலசுப்பிரமணியம் முத்துலட்சுமி (சிந்து)

தோற்றம்: 22 ஆகஸ்ட் 1929 - மறைவு: 21 நவம்பர் 2024

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், Oslo-நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் முத்துலட்சுமி அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும்,

சின்னத்தம்பி-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற  பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

உஷா, உதயகுமார், உருத்திரகுமார், அனுஷா, ஜனந்தசீலன், சுசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குலசேகரம், பிரபாகரன், நாகேஸ்வரன், மரீசா, அல்லி, சுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருபாநாயகம், மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை, சின்னம்மா, பாலசிங்கம், குணநாயகம், தியாகராஜா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பத்மாவதி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பரஞ்சோதி, வாலாம்பிகை ஆகியோரின் மைத்துனியும், 

டினேஷா, சந்தியா, சிவகாமி, அரவிந்தன், கிருஷ்ணகுமார், கிருஷ்சி, ஷாலினி, ஜனனி, தர்மேஷ், வசீகரன், நேருயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-11-2024 புதன்கிழமை அன்று காலை 9:30-11:30 மணி வரை òstre gravulnd, Store kapell (Tvetenveien 7,0661 Oslo Norway) இல் நடைபெற்றது.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"மாமி, சின்னம்மா சின்னத்தம்பி தம்பதியினருக்கு முத்துலட்சுமி என்ற பெயருடன் மூத்த லட்சுமி ஸ்தானம் பெற்று வந்த உங்கள் மடியில் மூத்த புதல்வனாகத் தவழ்ந்த பெருமையை நான் என்றும் மறவேன். நான் உங்களை சந்திக்கும் போதெப்போதும் அப்பு, இராசா என்ற வார்த்தைகள் மட்டுமே உங்கள் வாயில்இருந்து உதிரும். அம்மாவும் மதனி, மதனி என்று வாயார கூப்பிடுவா. உஷாவுடனும் , உதயனுடனும் உங்கள் சுவைசொட்டும் கொழுக்கொட்டைகளைப் பணயம்வைத்துப் போட்டியிடுவேன். நீங்களும் என் திருட்டுதனத்திற்கு சிரித்துவிட்டு என் ஆசைதீர செய்து தருவீர்கள். நான் பல்கலைக்கழகம் செல்லவிருக்கும்பொழுது நீங்கள் "கண்ணா நம்ப நட, நம்பி நடவாதே " என்ற ஒரேயொரு அறிவுரை மட்டும் சொன்னீர்கள். அதில் அடங்கிய விஷயங்கள் பலகோடியென நன்குஅறிவேன். இடர்றுற்போதும் குடும்பத்தை நிகர்தவறாது நிர்வகித்த உங்கள் திறன் இன்றும் என்மதிக்கெட்டாப் புத்திரகாவே உள்ளது. மாமி உங்கள் பிரிவை நான் விரும்பாவிடினும் பிள்ளைகள் உற்றார் உறவினர் சூழ இறையருள்ககூடிய உங்கள் பரிபூரண வாழ்வெய்தலை, உங்களை மீண்டும் என்று சந்திப்பேன் என்ற ஏக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். மருமகன் கண்ணன்"
- Kanagaratnam Umakanthan (, 16/12/2024 06:07)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2024 05:00)