திருமதி. பாலசுப்பிரமணியம் உருக்குமணி

பாலசுப்பிரமணியம் உருக்குமணி

மறைவு: 14 மே 2026

யாழ் தொல்புரத்தை பிறப்பிடமாகவும் சங்கரத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் உருக்குமணி அவர்கள் இன்று (14.05.2026) மதியம் சிவபதமடைந்தார்.               

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஐயரின் அன்பு மனைவியும்,
 
சண்முகம் ஐயா, சதாசிவக் குருக்கள், மங்களேஸ்வரி, காலஞ்சென்ற லலிதாம்பள் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
அமிர்தகௌரி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, சதாசிவம், குமரகுரு ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
ஸ்ரீகரன், கீர்த்தனா, கீரன், யுவாகினி, சங்கீதா, கீதாஞ்சலி, துளசிராம் ஆகியோரின் அன்பு பேத்தியாரும்,
 
ஸம்வத்ஷன், நேத்ரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை 10:00 மணியளவில் சங்கரத்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக வழுக்கையாறு இந்து மயாத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/05/2026 16:25)