Bramma Sri Balasubramaniya Sharma Jeyananda Sharma

Balasubramaniya Sharma Jeyananda Sharma

Date of Birth: 10 September 1954 - Deceased: 10 December 2024

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  பாலசுப்பிரமணிய சர்மா ஜெயானந்த சர்மா அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-12-2024 வியாழக்கிழமை காலை 8:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை (இல-51/16, சுவர்ண ரோட், வெள்ளவத்தை, கொழும்பு-06) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-12-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2024 05:00)