திருமதி. பாலசுப்பிரமணியம் சறோஜினிதேவி (மலர்)

பாலசுப்பிரமணியம் சறோஜினிதேவி (மலர்)

தோற்றம்: 16 ஏப்ரல் 1946 - மறைவு: 28 பெப்ரவரி 2025

யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு 8 ஆம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும், இல.128, லக்சபானா வீதி, தோணிக்கல்லை தற்போதயை வசிப்பிடடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் சறோஜினிதேவி அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் - சிவகாமிப்பிள்ளை, செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (பிள்ளை குட்டியர்) - சிவக்கொழுந்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

பாலசுப்பிரமணியம் (தவம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணகாந்தி, ஜெயந்திமாலா மற்றும் ஞானசேகரம், குணசேகரம், தனபூபதி, காந்தரூபி, இராஜசேகரன், பாலசேகரம், ஞானரூபி, ஜெயரூபி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மேகலா (ஆசிரியை - வவுனியா பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலயம்), சிவகுமார் (சுவிஸ்), சசிகுமார், (கவிஞர் - சசிபாலா), றஜிகலா (பிரான்ஸ்), இந்திரகுமரன் (குமரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயகாந்தன் (ஆசிரியர் - வவுனியா பாவற்குளம் கணேசுவரா மகா வித்தியாலயம்), அகிலா (சுவிஸ்), சுமித்தி;ரா, சுரேஸ்குமார் (பிரான்ஸ்), கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஜீவா (மருத்துவ பீட மாணவி, பேராதனைப் பல்கலைக்கழகம்), பிரவகி, ஜனுசிகன், கிஷாந்த், சஜாந்த், சஹர்ணிகா, மகிஷன், ஜஷ்னுஜா, கிருஷன், ஜஸ்வினி, திவிஜா, சகிஷ்னன், பிரதீஸ், சங்கீத் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம்மா, நாகநாதபிள்ளை, விநாயகமூர்த்தி, இராஜகோபால், பேரின்பநாயகம் மற்றும் இரத்தினசிங்கம், காலஞ்சென்ற குமரையா, பாக்கியலட்சுமி, வனிதா, பாலசிங்கம், காலஞ்சென்ற தேவானந்தன், வனிதா, விஷ்ணுகாந்தி, நாகராசா, செந்தில்நாதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2025 05:00)