திருமதி. பாலசுப்பிரமணியம் தவநாயகி

பாலசுப்பிரமணியம் தவநாயகி

மறைவு: 02 பெப்ரவரி 2025

யாழ். காரைநகர் பெரிய தபால் கந்தோரடியை பிறப்பிடமாகவும்,  கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் தவநாயகி  அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து (இளைப்பாறிய அதிபர்) - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை (இளைப்பாறிய ஆசிரியர்) - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியத்தின் (முன்னாள் உதவி அரசாங்க அதிபர் - Retd. A. G. A) ஆருயிர் மனைவியும்,

Dr. நாகேஸ்வரன் (Consultant Anaesthetist District General Hospital Vavuniya),  நாகேஸ்வரி (Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகுமார் (Canada), சிவானுஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரியங்கா (Tbilisi State Medical University, Georgia), சஞ்சீவ் (Faculty of Medicine University of Colombo) ஆகியோரின் பிரியமிகு அப்பம்மாவும்,

கார்த்திக் (Canada), துர்கா (Canada) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

காலஞ்சென்ற முருகானந்தனின் அன்புச் சகோதரியும்,

நவமணி (USA), காலஞ்சென்றவர்களான கணேசன், தியாகராசா, சிதம்பரநாதன், ஆனந்தராசா, நாகரட்ணம், கோபாலன், கருணாகரன், இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-02-2025 திங்கட்கிழமை காலை 8.00 முதல் பிற்பகல் 3.00 மணி வரை The Respect Home by Jeyaratne Funeral Directors PVT Ltd. (No. 483 Bauddhaloka Mawatha Colombo 08) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2025 05:00)