Mrs. Balasuntharam Poopalaluxmy

Balasuntharam Poopalaluxmy

Date of Birth: 21 January 1948 - Deceased: 08 July 2025

யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுந்தரம் பூபாக்கியலக்‌ஷ்மி அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு - அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா - மங்கையகரசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்.

காலஞ்சென்றவர்களான வரதராஜா, தியாகராஜா, செல்வராஜா, ஆனந்தராஜா, ராசநாயகம், சிவபாக்கியலட்சுமி, தனபாக்கியலட்சுமி மற்றும் ராஜறஞ்சனி, ஜெயரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தியாகசீலன் (டென்மார்க்), பாலசொரூபி (இலண்டன்), பாலமுரளி (நோர்வே), பாலசுதர்சனி (டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உதயசந்திரிக்கா, வரதபாலன், தர்மசாந்தினி, சதீஸ்வரராஜா ஆகியோரின் மாமியாரும்,

ஸ்ரிபன், டிலக்ஷன், சிமோன், நிதுர்சன், திலீபன், திவ்யன், சஞ்சய், கரிஷன், நிவேதிகா, சாருகா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அயீலின், நேகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/07/2025 04:00)