Mr. Balasuntharam Thanabalasingham

Balasuntharam Thanabalasingham

Date of Birth: 10 March 1954 - Deceased: 02 August 2025

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுந்தரம் தனபாலசிங்கம் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுந்தரம் - கதிரிப்பிள்ளை (குஞ்சுப்பிள்ளை) தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

குலராசசிங்கம், ஜெயபாலசிங்கம், ஸ்ரீபாலசிங்கம், சிவபாலசிங்கம், காலஞ்சென்ற பரமேஸ்வரி, மங்களேஸ்வரி, சிவனேஸ்வரி, சந்திரேஸ்வரி, காலஞ்சென்ற சுகந்தி.ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுதர்சினி (ஆசிரியை - யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), சுதர்சினி (சிரேஷ்ப பிரதி ஆணையாளர் - உள்நாட்டு இறைவரி திணைக்களம், கொழும்பு), சுரேந்தினி (ஆசிரியை - யாழ். மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்), தர்ஜினி.(அபிவிருத்தி உத்தியோகத்தர - பிரதேச செயலகம், நல்லூர்) ஆகியோரின் தந்தையும்,

வசந்தகுமார், சர்வேஸ்வரன், வேல்நம்பி, கஜேந்திரன் (ஆசிரியர் - யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி) ஆகியோரின் மாமனாரும்,

துவாஷிகா, சஞ்சயன், கம்ஷனா, வேனுஜா, அபிலாஷ், ஜயானி, மகினன், நேதுகா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/08/2025 04:00)