திருமதி. பாலசுதர்சினி கிரிதரன் (ராஜி)
தோற்றம்: 04 ஏப்ரல் 1976 - மறைவு: 06 ஜூன் 2021
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாலசுதர்சினி கிரிதரன் அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், பாலசுப்பிரமணியம் (பாலா மாஸ்ரர்), காலஞ்சென்ற சுகிர்தலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சற்குணநாதன், நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிரிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சதுர்த், சானிகா, சஞ்ஞிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசுதாயினி (ராதை), பாலசுதாயன் (மாயா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகேஸ்வரன், வாசுகி சுபாஜினி, தபோதினி, நளாயினி, சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மேசிகா, கேசிகன், ஆதவன், பிரணவி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ரிஷிகர், சுரபி, ரஷிகா, வினுஜன், ஆரணி, அபிஷன், ஆருஜன், பவிசனன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
