திருமதி. பேணடேற் ஜோண் (ஜோண் ரீச்சர்)
(ஓய்வுபெற்ற ஆசிரியை - வவு.இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம்)
தோற்றம்: 01 பெப்ரவரி 1935 - மறைவு: 12 பெப்ரவரி 2026
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா - வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பேணடேற் ஜோண் அவர்கள் 12-02-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை - எலிசபேத்தம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சாமுவேல் மறை ராஜா ஜோண் - எமா அமுதமணி ஜோண் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவதாசன் ஜோண் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நீக்லாப்பிளள்ளை அல்பிறேட், அல்பேட் மரியம்மா, ஜோண் மரியதாஸ் (துரை) மற்றும் குணதிலக ரெஜினா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-02-2026 சனிக்கிழமை அன்று மதியம் 1.00 மணி முதல் அன்னாரது இல-50, இராசதுரை வீதி, வைரவபுளியங்குளம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் ஆராதனைகள் நடைபெற்று, சரீரம் இறம்பைக்குளம் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
