திருமதி. பகீரதி ஞானகாந்தன்
(Bsc, Msc [Hons-Microbiology])
தோற்றம்: 05 டிசம்பர் 1975 - மறைவு: 29 அக்டோபர் 2024
யாழ். ஏழாலை தெற்கு விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பகீரதி ஞானகாந்தன் அவர்கள் 29-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஈஸ்வரலிங்கம்-செல்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குமாரதாசன்-சரஸ்வதி (நீர்வேலி தெற்கு) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
Dr. ஞானகாந்தன் (இருதய சத்திரசிகிச்சை நிபுணர்-NHSL) அவர்களின் அன்பு மனைவியும்,
கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரி மாணவிகளான கிர்த்திகா, சக்திகா ஆகியோரின் அன்பு தாயாரும்,
ஜனகன் (கனடா), காலஞ்சென்ற ராகவன், லவகுசன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கவிதா (கனடா), சுமித்ரா (பிரித்தானியா), பவானி (அவுஸ்திரேலியா), Dr. உமாசங்கர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 31-10-2024 வியாழக்கிழமை காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
