Mrs Bhupathi Subramaniyam
Date of Birth: 19 May 1940 - Deceased: 07 May 2024
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூபதி சுப்ரமணியம் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - நாகம்மா தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான இராசையா - செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் மனைவியும்,
தயாளினி (ஆசிரியை - யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன், விஜயலட்சுமி, சுந்தரலிங்கம், சிவபாக்கியம் (கனடா), செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இலட்சுமி, பாலசிங்கம் மற்றும் பார்வதிப்பிள்ளை, பத்மநாதன், ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான சோதிப்பிள்ளை, புஸ்பராணி, கந்தசாமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-05-2024 புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளகுக்காக முற்பகல் 10.00 மணியளவில் நீர்வேலி வடக்கு சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
