திருமதி பூபதிப்பிள்ளை கதிரவேலுப்பிள்ளை(அன்னலஷ்மி)
தோற்றம்: 12 பெப்ரவரி 1923 - மறைவு: 11 பெப்ரவரி 2024
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் நல்லூர், ஐக்கிய அமெரிக்கா USA ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கதிரவேலுப்பிள்ளை பூபதிப்பிள்ளை அவர்கள் 11-02-2024 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நல்லூரில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, திருச்செல்வம், நாகரத்தினம், இராசதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கதிரவேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
வசந்தா, வனஜா, வானதி, கிரிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், ஆனந்தகுமாரன், மகாநாதன், Michele ஆகியோரின்
அன்பு மாமியாரும்,
கஸ்தூரி, குருபரன், கார்த்திகா, சங்கீதா, பாலமுருகன், சாம்பவி, சுமந்திரன், கௌரங்கன், Andrew, Ashley ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சிவானி, வைதேகி, யாதவன், பிரியன், அதீஸ், நிவாசினி, அஞ்சனா, அனுப்பிரியா, ஆராதனா, கயிலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2024ம் திகதி புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
வீட்டு முகவரி:-
393/16, கோவில் வீதி,
நல்லூர்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2024 04:23)
