திருமதி பூபதி கிருஷ்ணநாதன்

பூபதி கிருஷ்ணநாதன்

தோற்றம்: 20 பெப்ரவரி 1938 - மறைவு: 25 ஜனவரி 2024

யாழ். சுன்னாகம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூபதி கிருஷ்ணநாதன் அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை கிருஷ்ணநாதன் (இலங்கைநாயகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நடராசா, கனகரத்தினம், சிவஞானம், இராசலிங்கம் மற்றும் குணரத்தினம், சாந்தினி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பராசா, தர்மாவதி, ஞானத்துரை மற்றும் இராஜேஸ்வரி, சிவசோதி, கமலாதேவி, புஸ்பா ஆகியோரின் மைத்துனியும்,

திலகரத்தினம் இரஞ்சினிதேவி, காலஞ்சென்ற குமாரவேல் திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தயாபரன், கிருபாகரன் (Kiruba Hardware Wellawathai), சுஜாதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கீர்த்தனா, சுகந்தி, மனோகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரணிகா, சுவஸ்திகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

13 6/4, பசல்ஸ் லேன், 

வௌ்ளவத்தை.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2024 05:00)