Mr. C.K.R. Dharmarajah (Thamba)

(Munchee Biscuits, Nips (Translank) & CTM Apparels)

C.K.R. Dharmarajah (Thamba)

Date of Birth: 10 January 1944 - Deceased: 30 December 2025

நுவரெலியா - மஸ்கெலியா காட்மோரை பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. C.K.R. தர்மராஜ் அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற C.K.R. ராமசாமி - மீனாம்பாள் தம்பதியினரி பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற சுப்பையா - ராக்கம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ராஜலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ்மோகன் (ராஜ் - Asiri Central Hospital), யோகராஜா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஷோபா, செந்தினி ஆகியோரின் மாமனாரும்,

நேஹா, யதிக்‌ஷா, மினுஷன், யத்வின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற துரைராஜ், தியாகராஜ், ராஜலெட்சுமி, சுந்தர்ராஜ், சாந்தா, நடராஜ் (மதுரை), விஜயலட்சுமி, ஜெயா, சுதா, வசந்தா ஆகியோரின் அன்புச் சகோதரும்,

காலஞ்சென்ற சிவலிங்கம், நமசிவாயமூர்த்தி, கதிரேசன், நடராஜ், தவராஜா, ஜெயராஜா, நவராஜா (Brilliant Center, Keyzer Street) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற கந்தையா - விஜயலட்சுமி, துரைரட்ணம் - நிரஞ்சலாதேவி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-12-2025 முற்பகல் 10.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-01-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/01/2026 00:00)