திரு. கந்தையா கனகராஜா

கந்தையா கனகராஜா

தோற்றம்: 14 ஜூன் 1941 - மறைவு: 15 ஜூலை 2026

இன்று எங்கள் குடும்பம் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பை சுமந்து நிற்கிறது.

எங்களுக்கு அன்பையும் அரவணைப்பையும் அயராது வழங்கி எங்களை வழிகாட்டிய தெய்வம் இறைவனின் பாதங்களில் சரணடைந்தது.

தன்னைச் சுற்றியுள்ளோரை அன்பால் அரவணைத்து, ஊக்கத்தால் உயர்த்தி, மனிதநேயத்தால் இணைத்த அரிய ஆன்மா அவர்.
அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பால் நிறைந்திருக்கும்.
 
அவரது பணிவு, நேர்மை , ஒழுக்கம், உறுதி, தன்னலமற்ற சேவை, நினைவாற்றல் போன்ற உயர்ந்த பண்புகளால் அனைவரையும் அரவணைத்து வழி நடத்தியவர். தொடர்ந்தும் எங்கள் மனங்களில் வாழ்ந்து வழி நடத்துவார்.
 
அவரது இழப்பு எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, அவரை அறிந்த அனைவரின் மனதிலும் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
 
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.”
 
பொருள்: இந்த உலகில் அறநெறியோடு, ஒழுக்கத்துடன், பிறருக்கு நன்மை செய்து வாழ்பவன், இறப்புக்குப் பிறகு வானுலகில் வாழும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றற்றப்படுவான்.
 
 
 
யாழ்ப்பாணம் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது ஐக்கிய அமெரிக்கா பொஸ்டன் நகரத்தில் வசித்தவந்தவருமான திரு. கந்தையா கனகராஜா அவர்கள் 15-07-2026ம் திகதி புதன்கிழமை இயற்கை எய்தினார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சரஸ்வதி தம்பதியினரின் அருமைப் புதல்வரும்;
 
காலஞ்சென்றவர்களான தம்பையா, சிவபாக்கிய வள்ளிநாச்சன் தம்பதியினரின் அன்பு மருமகனும்;
 
விக்னராணி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்;
 
அனுஷா, கவிதா, கிருஷ்ணா அவர்களின் பாசமிகு தந்தையும்;
 
அருளம்பலம் (முரளி), சுகுணன்  ஆகியோரின் அன்பு மாமானாரும்;
 
ஸ்ரீராம், கார்த்திக், லக்சுமி, விஷ்ணுவின் பாசமிகு தாத்தாவும்;
 
ராஜபுஷ்பம் (பிள்ளை), காலஞ்சென்ற ஆனந்தபுஷ்பம் (குஞ்சு)ஆகியோரின் பாசமிகு சகோ தரரும்;
 
இராமச்சந்திரன், விக்னராசா , மகாரா ணி, அழகராசா , காலஞ்சென்றவர்களான ஈஸ்வரசரன், ஹரிதாஸ், பொன்மலர், பவளமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்;
 
யோகலிங்கம், கமலாம்பிகை , கருணேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரன், சாந்திகுமாரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்;
 
ரமணி, சந்ரா சுபாஷ், ரோஹினி, பிரசன்னா , நிலானி, கல னி, சங்கீதா, சவீந்திரா, சஞ்ஜேந்திரா, அர்ச்சனா, அனந்தன் ஆகியோரின்அன்பு மாமனாருமாவார்.
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Sunday, 19 July 2026  9:00 AM
 
Carrier Family Funera Home & Crematory,
38 Range Rd, Windham, NH 03087, United States, 

கிரியை:-
 
Sunday, 19 July 2026  10:00 AM 
 
Carrier Family Funera Home & Crematory,
38 Range Rd, Windham, NH 03087, United States, 

இறுதி வணக்க நிகழ்வுகள்:-
 
Sunday, 19 July 2026   11:00 AM
 
Carrier Family Funera Home & Crematory,
38 Range Rd, Windham, NH 03087, United States,
 
தகனம்:-
 
Sunday, 19 July 2026   12:00 PM
 
Carrier Family Funera Home & Crematory,
38 Range Rd, Windham, NH 03087, United States,

 
 

தொடர்புகளுக்கு:

விக்னராணி(ராசாத்தி) - மனைவி Mobile: +1 781 395 6479
அனுஷா - மகள் Mobile: +1 610 858 0785
கவிதா - மகள் Mobile: +1 617 909 2315
கிருஷ்ணா - மகன் Mobile: +1 610 302 0006

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2026 06:29)