திரு. சஜீவன் சிவபாதம்

சஜீவன் சிவபாதம்

தோற்றம்: 03 ஏப்ரல் 2001 - மறைவு: 03 ஆகஸ்ட் 2026

யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், கனடா - Toronto வைப் பிறப்பிடமாகவும், கனடா - Maple வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சஜீவன் சிவபாதம் அவர்கள் 03-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை - பாக்கியம் தம்பதியினர், காலஞ்சென்ற நடராசா - புவனேஸ்வரி (கனடா) தம்பதியினரின் அன்புப் பேரனும்,

சிவபாதம் - நந்தினி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,

டெஜீவன், ஹர்ஜின்னா, பவித்தனா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

திவ்யா, தோமாஸ், நவிஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீரன்யா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற கதிர்காமு - பாக்கியலெட்சுமி, திருநாவுக்கரசு - வனிதா, மணிவண்ணன் - பவா, சிவலோகநாதன் - ஜெயந்தினி, புலேந்திரன் - சாந்தினி, திருச்செல்வம் - கிருபாலினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம் - பூங்காவனம், மகேந்திரன் - பரிமளம், மற்றும் சிவயோகராசா - அமுதசுரபி, நந்தகுமார், தேவராணி, செல்வகுமார் - கஜனி ஆகியோரின் அன்பு மருகனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-08-2026 சனிக்கிழமை அன்று மாலை 6:00 - 9:00 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 - 1:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2026 00:00)