Mrs. Chandra Subramaniyam
Date of Birth: 23 November 1947 - Deceased: 13 March 2026
ஹட்டன் ஆரியமையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சந்திரா சுப்ரமணியம் அவர்கள் 13-03-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், எஸ். சுப்ரமணியம் முதலியார் அவர்களின் அன்பு மனைவியும்,
அகிலன், பிரதீப்குமார், மோகன், இந்திராணி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சண்முகராஜா முதலியார் (ராஜீ), ஜெயகௌரி, புஷ்பா, இந்துநில் ஆகியோரின் மாமியாரும்,
அருள்பிரகாசம் அவர்களின் அக்காவும்,
மதுக்ஷன், பிரவீன் குமார், ஷாருகேஷ், ஜனுருக்ஷான், அசந்து, துல்நேத், லக்ஷரா, ஷஹி, துவனி செனாயா, கெவின் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கொட்டகலை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
