திருமதி. சந்திரகலா ராஜமோகன் (இந்திரா)
தோற்றம்: 30 மார்ச் 1964 - மறைவு: 22 பெப்ரவரி 2025
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரகலா ராஜமோகன் அவர்கள் 22-02- 2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை - அன்னபுவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ராஜதுரை - சுசிலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராஜமோகன் (மோகன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
இளவரசி, பிரபாகரன், ஆரோக்கியம், சிந்து, திலீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தங்கன், லீசா, ரகு, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரோகித், ரொக்சி, சுபிக்சா, ரக்சன், ரித்திக் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
வபீசன், சிவன், தீரன், மித்ரன், துர்கா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சைனம்மா, இரஞ்சிதமலர், காலஞ்சென்றவர்களான துரைரத்தினம், சந்திரபோஸ், சந்திரகாந்தா மற்றும் குணபாலசிங்கம், சந்திரகுமாரி, சந்திரசேகரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேம்பாமலர், காலஞ்சென்ற செல்வமோகன், சுசீந்திரமோகன், காலஞ்சென்றவர்களான விஜயமோகன், இரவீந்திரமோகன் மற்றும் கிருபாமலர், கிருஷ்ணமோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:30 - 1:30 மணி வரை Chapel House Estate Weddings, Events and Stays in Kent (Thorne Hill, Ramsgate CT12 5DS, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் Home (Bullockstone RdHerne Bay, CT6 7NF UK) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
