திருமதி. சந்திரலிங்கம் பூமணி

(முன்னாள் சங்கீத ஆசிரியை - வவு. ஓமந்தை மத்திய கல்லூரி)

சந்திரலிங்கம் பூமணி

தோற்றம்: 28 ஜூன் 1950 - மறைவு: 08 ஏப்ரல் 2026

யாழ். காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும், காரைநகர் சம்பந்தர்கண்டி, ஓமந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரலிங்கம் பூமணி அவர்கள் 08-04-2026 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முன்னாள் ஓமந்தை பிரபல வர்த்தகரான குழந்தைவேலு - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சம்பந்தர்கண்டி நாகலிங்கம் - அமிர்தரத்னம் தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற சந்திரலிங்கம் (சித்தப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,

இளங்குமரன், இளங்கீரன், இளஞ்செழியன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/04/2026 00:00)