Mrs. Chandramalar Ariynayagam
(Retired Post Mistress- Pandiruppu Kalmunai & Retired Receptionist MICD, Madiwala)
Date of Birth: 17 May 1945 - Deceased: 18 July 2025
"நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்.
என் ஓட்டத்தை முடித்துவிட்டேன்,
விசுவாசத்தை காத்துகொண்டேன்."
(2 தீமோத்தியோ 4:7)
கொழும்பை வசிப்பிடமாக் கொண்ட திருமதி. சந்திரமலர் அரியநாயகம் அவர்கள் 18-07-2025 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இராசையா தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு.திருமதி. சுப்பிரமணியம் தம்பதியினரின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற அருமைநாயகம் (Range Forst Officer) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஹேமானந்த் (Coordinating Secretary - Labour Ministry & Former Principal - St. Mary's Tamil Maha Vidhyalayam, Bambapitiya), ஷியானந்த் (ஐக்கிய இராச்சியம்), உஷானா (கனடா) காலஞ்சென்ற ரூபானந்த் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
அனுஷா (ஆசிரியை - St. Clare's College, Colombo-06), குறிஞ்சி (ஐக்கிய இராச்சியம்), கிறிஸ்டி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெனாலி (ஐக்கிய இராச்சியம்) அன்பு அப்பம்மாவும்,
ஹெஸ்ரோன் (கனடா), ஹரேஷ் (கனடா), ஹரல்ட் (கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
இராஜகுலேந்திரன் (ஓய்வுபெற்ற தலைமை பொறியியலாளர் - இலங்கை புகையிரத திணைக்களம்), வசந்தா (ஓய்வுபெற்ற ஆசிரியை), செல்வசந்திரன் (ஐக்கிய இராச்சியம்), விமலநாதன் (ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்ற பாஸ்டர் தயா (கனடா), Dr. ஜெயராணி (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அரியமலர் ஜெயராஜ், மதனா மற்றும் A.M.E போல் (Red. Provincial Director of Education - Eastern Province), றூபா (ஐக்கிய இராச்சியம்), நாதன் (ஐக்கிய இராச்சியம்), நிமலினி (கனடா), அலெக்ஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:30 மணியளவில் இறுதி ஆராதனைகளின் பின் சரீரம் பொரளை பொது மயான கிறிஸ்தவ பிரிவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
