Mrs. Chandramani Devi Jeevaratnam
(ஓய்வுநிலை உதவிக் கல்வி பணிப்பாளர் - திருகோணமலை, முன்னாள் ஆசிரியை - மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, திருகோணமலை)
Date of Birth: 20 December 1941 - Deceased: 26 March 2025
திருகோணமலை இல-28, ஜோர்ஜ் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிமாகவும், தற்போது இல-69, பசல்ஸ் லேன், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரமணிதேவி ஜீவரத்தினம் அவர்கள் 26-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சித்திரவேலு - நடராஜமணி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிராமத்தம்பி - அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜீவரத்தினம் (முன்னாள் அதிபர் - தி/இ.க.ச.கோணேஸ்வர இந்துக் கல்லூரி, இளைப்பாறிய கோட்டக்கல்வி அதிகாரி - திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான விசாகப் பெருமாள், காங்கேயன் மற்றும் ஞானப்பூங்கோதை (அவுஸ்திரேலியா), குமரநாதன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரலீலா, கருணேஸ்வரி, ஜெயதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஐங்கரன் (மருத்துவர் - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, களுபோவில), ஜனனி (ஆசிரியை - தி/ ஶ்ரீ சண்முக இந்து மகளீர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனுயா சுரங்கனா (Director - Oprtations Palladium), காந்தன் (பொறியியலாளர் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அம்ரிதா, அனுக்கிரணுகா, அக்ஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-03-2025 வௌ்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
