Mrs. Chandrasegara Komaleswary

Chandrasegara Komaleswary

Date of Birth: 19 November 1945 - Deceased: 16 February 2026

யாழ். சாவகச்சேரி, அல்லாரை தெற்கு, கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரசேகரா கோமளேஸ்வரி அவர்கள் 16-02-2026ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபதம்  அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, அன்னபூரணம் தம்பதியரின் ஏக பாசமுள்ள புத்திரியும்,

காலஞ்சென்ற சந்திரசேகரா (ஓய்வுபெற்ற அதிபர்- யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சியாமளா (ஆசிரியை, லண்டன்), மேனாகா (பிரான்ஸ்), அனுஷா (ஆசிரியை- யாழ். மட்டுவில் கமலாசினி வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலகிருஸ்ணன் (ஆசிரியர், லண்டன்), மோகனதாஸ் (பிரான்ஸ்), குகானந்தன் (ஆசிரியர்- யாழ் இந்துக் கல்லூரி), சுகந்தன் (கணிய அளவியலாளர், துபாய்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மகாதேவா (நல்லூர், பூநகரி), மகாலிங்கம் (நோர்வே), பத்மநாதன் (கனடா), காலஞ்சென்ற ரவீந்திரராஜா (நோர்வே), சிவமலர் (கனடா), கோமளா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புழினி, அருளினி, மன்ரியூன், ஸ்ரீபன், ஜஸ்மிதன், லக்சுதன், நித்திலா, மிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 18-02-2026ம் திகதி புதன்கிழமை முற்பகல் 8:00 மணியளவில் இல.33 முதலாம் மைல் வீதி, மடத்தடி சாவகச்சேரி என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்முற்பகல் 10:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2026 06:59)