Miss. Chandrasegarampillai Sivananthavalli
(ஓய்வுபெற்ற ஆசிரியை - யாழ், கனகரத்தினம் ம.ம.வித்தி, வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் வித்தியாலயம்)
Deceased: 18 January 2025
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சந்திரசேகரம்பிள்ளை சிவானந்தவல்லி அவர்கள் 18-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை - அன்னலட்சுமி தம்பதியினரின் கனிஷ்ட மகளும்,
Dr.நீலாயதாட்சி, காலஞ்சென்ற செல்வி பராபரை காயாரோகணன் (ஓய்வு பெற்ற தொழில்நுட்பவியலாளர் - யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் சகோதரியும்,
பாலச்சந்திரன் (ஓய்வுபெற்ற மாவட்ட மருந்தாளர்), நபோநிதி (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் மைத்துனியும்,
Dr.அரவிந்தன் (யாழ் போதனா வைத்தியசாலை), சுதர்சன் (அவுஸ்திரேலியா), சிவதர்சன் (பிரித்தானியா), லவலோஜன் (பொறியியலாளர்) ஆகியோரின் சிறியதாயும்,
Dr.சௌமி (யாழ் போதனா வைத்தியசாலை), Dr.சௌஜா (யாழ் போதனா வைத்தியசாலை), கஜானன் (பொறியியலாளர்), சௌஜந்தி (விவசாய முகாமைத்துவ மாணவி) ஆகியோரின் அத்தையும்,
Dr.லோஜிதா, கலைவதனி (பிரித்தானியா), சுதர்சினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியும்,
ஆருக் ஷி, ஆஹர்ஷி, சுவாஸ்தி, சாருஜன், ஷாஷ்வி, ஆத்மி, அகிஷா, தளிர்விழி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-01-2025 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- Dr.பா.அரவிந்தன்
முகவரி:-
இல-228 / 2, சேர் பொன் இராமநாதன் வீதி,
திருநெல்வேலி.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
