திருமதி. சந்திரசேகரன் கலைவாணி

சந்திரசேகரன் கலைவாணி

தோற்றம்: 30 ஜனவரி 1969 - மறைவு: 03 செப்டம்பர் 2026

இந்தியா - திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமம் வளமுடையான் கோத்திரத்தை சேர்ந்த நடேசன் - காலஞ்சென்ற சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்றவர்களான செட்டியப்பன் - கமலம் தம்பதியினரின் மகளும், சந்திரசேகரன் (Timex, Colombo-11) அவர்களின் அன்பு மனைவியுமான கலைவாணி அவர்கள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று காலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஷானந்த், மிதுஷாந்த் ஆகியேரின் பாசமிகு தாயாரும்,

புவனேஸ்வரி, கோவிந்தராஜ், பவானி, கணராஜ், அம்பிகா ஆகியோரின் சகோதரியும்,

நிர்மலா, கலாவதி, கௌரி ஆகியோரின் அண்ணியும்,

காலஞ்சென்ற லோகநாதன், சிவலிங்கம், மகேந்திரராஜா ஆகியோரின் கொழுந்தியாவும்,

ரஞ்சனி, மீனாகுமாரி ஆகியோரின் நாத்தானாரும்,

நாகரட்ணம் (Nirmala Dress Makers, திருச்சி), செல்வராஜ் (Gangaa Tex, கொழும்பு - 11), ராஜேந்திரன் (Suganya Fancy Mahal, கட்டுநாயக்க) ஆகியோ-ரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-09-2026 சனிக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 02.30 மணியளவில் ஈமக்கரியைகள் நடைபெற்று, மாலை 04.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சந்திரசேகரன்:- +94 76 466 3579
ஷானந்த்;- +94 76 620 9696

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2026 00:00)