Mrs. Chellaiya Leelavathy

Chellaiya Leelavathy

Date of Birth: 24 October 1934 - Deceased: 25 May 2026

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லையா லீலாவதி அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு - தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,

சுன்னாகம் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற வைரவி செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

சேனாதிராஜா (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்), உதயசூரியன், கலாரஞ்சினி, மனோகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திராதேவி, கமலாசனி, கமலறஞ்சிதன், சிராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஜீவ், நர்மதா, தனஞ்சயன், திஷாவந்தி, ஜனார்த்தன், சுயதன், தமிழினி, சாகித்தியா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

அக்ஷரா, ஆருத், ருக்மினி, ஆரியன், ஜரா, யுவன், சௌமியா, சாம்பவி, சீதாலக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அராலி தெற்கிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அராலி தெற்கு பூனாவடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/05/2026 00:00)