Mrs. Chellamma Balasingham
Deceased: 30 April 2025
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லம்மா பாலசிங்கம் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜா - செல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரு - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இடபரூபன், வகுலமாலா, காலஞ்சென்ற சித்ரூபன், சற்சொரூபன் (சச்சா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசக்தி, காலஞ்சென்ற ஜோதிவேல், கோமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நவீன், பிரணவி, சரணவி, அபிஷரன், அபிவர்ஷன், ஆருத்ரா, காருண்யன், நந்திகா, தட்சயன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, செல்லப்பா, பரமேஸ்வரி, துரைசிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தங்கையும்,
காலஞ்சென்றவர்களான பூலோகம், அம்பலவாணர், மகேஸ்வரி, மனோன்மணி, புனிதவதியார் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
