திரு. செல்லம்பரம் ராமலிங்கம்
(பதுளை கவரகலை தோட்ட கள அதிகாரி, கணக்காளர் - கிராண்ட்பாஸ் விசாகா அடகு ஸ்தாபனம்)
மறைவு: 05 ஆகஸ்ட் 2026
கண்டி - கெட்டபுலாவைப் பிறப்பிடமாகவும், இல- 20/4, மாதம்பிட்டிய வீதி, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லம்பரம் ராமலிங்கம் அவர்கள் 05-08-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், யமுனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்ஜனி, ரஞ்ஜித்குமார், ரவிக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அஷோக்குமார், புவனேஸ்வரி, லோகதர்ஷனி ஆகியோரின் மாமனாரும்,
ரிதீஷ், ராகேஷ், அனுஷ்கா ஆகியோரின் செல்லத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-08-2026 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் 08-08-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
"மலைகளின் அரசனாக துள்ளித்திரிந்த எம் மலையரசன் மீளாத் துயில்கொள்ள விம்மும் இதயம் மறவாது உங்கள் பசுமையை"
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
