பேராசிாியா். செல்லமுத்துப்பிள்ளை மூக்கையா (கந்தசாமி)
(முன்னாள் உபவேந்தர்- கிழக்கு பல்கலைக்கழகம், மட்டக்களப்பு)
மறைவு: 12 மே 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் திண்ணணூர் கிராமம், திருச்சியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. செல்லமுத்துப்பிள்ளை மூக்கையா அவர்கள் 12-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்துபிள்ளை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற பூஞ்சி சுப்பையாபிள்ளை - முத்துலெட்சுமி தம்பதியினரின் மருமகனும்,
அம்புஜம் அவர்களின் அன்புக் கணவரும்,
பார்தீபன், பிரதாபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தாட்சாயினியின் மாமனாரும்,
வானதி, இளங்கோ ஆகியோரின் பாட்டனாரும்,
கணபதிராஜா (இலண்டன்), ஜோதிராஜா (திருச்சி), அமிர்தஜோதி (அமெரிக்கா), சண்முகராஜா, கமலேஸ்வரி (திருச்சி), காலஞ்சென்ற ஆனந்தராஜா ஆகியோரின் சகோதரரும்,
வைத்திலிங்கம் (திருச்சி) அவர்களின் மைத்துனரும்,
சுகுமார் (திருச்சி) அவர்களின் மாப்பிள்ளையும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 14-05-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் S 12A, ரோயல் கேஸ்டில், முதல் மெயின் ரோடு, 4வது கிராஸ் (சங்கம் ஹோட்டல் அருகில்) ராஜா காலனி, திருச்சி 620 0001 அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
