திரு. செல்லையா சந்திரசேகரி
தோற்றம்: 15 ஜூலை 1934 - மறைவு: 11 மே 2026
யூனியன் கல்லூரியின் பழைய மாணவி, கல்லூரியின் தலைசிறந்த விஞ்ஞான ஆசிரியராக சேவையாற்றிய அமரர். பத்மாவதி சந்திரசேகரி அவர்களின் பாசமிகு கணவர் ஓய்வுபெற்ற மகாஜனக் கல்லூரி ஆசிரியர் திரு. செல்லையா சந்திரசேகரி அவர்கள் 11/05/2026 அன்று இறைபதமடைந்தார் என்பதை கனத்த இதயத்துடன் அறியத்தருகிறோம்.
சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும், நைஜீரியா, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார், சண்டிலிப்பாயைச்சேர்ந்த காலஞ் சென்றவர்களான ஆறுமுகம் செல்லையா, பொன்னம்மா செல்லையா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கட்டுவனைச் சேர்ந்த காலஞ் சென்றவர்களான காசிப்பிள்ளை பரந்தாமர், நாகமுத்து பரந்தாமர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யூனியன் கல்லூரியின் தலைசிறந்த விஞ்ஞான ஆசிரியராக 1974- 1985 வரை சேவையாற்றிய அமரர். பத்மாவதி சந்திரசேகரி அவர்களின் அன்பு கணவனும்,
யூனியன் கல்லூரி, மகாஜனக் கல்லூரி பழைய மாணவிகள் சுமதி பத்மகாந்தன் (84 O/L 87 A/L), சாந்தி மோகன் (85 O/L 88A/L), பாமதி இராமதாஸ் (89 O/L 92 A/L) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
பத்மகாந்தன், மோகன், இராமதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கர், மயூரன், டக்ஷனி, சுதர்சன், சோபிதா, சிமித்தா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
அமரா, சயலா, றியாவின் பூட்டனும்,
Dr. நடராஜா, புவனேஸ்வரி, நகுலேஸ்வரி, மகேஸ்வரி, நீலாம்பிகை ஆகியோரின் அன்புச் மைத்துனருமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
ஆசிரியர் அவர்களின் ஆத்மா நித்திய பேரின்பப்பெருவாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் அருமைப் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், நண்பர்கள் மற்றும், உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம். எமது ஆழ்ந்த அனுதாபங்களை யூனியன் கல்லூரி சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
'வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டிருக்கின்ற' ஆசிரியர் செல்லையா சந்திரசேகரி அவர்களின் ஆத்மா சாந்திபெறுவதாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
Funeral Details
Ajax Crematorium and Visitation Centre
347, Finley Avenue., Ajax, ON L1S 2E3
VIEWING:-
Sunday, May 17, 2026 5:00 PM - 8:00 PM
RITUAL HOURS:-
Monday, May 18, 2026 8:00 AM - 11:00 AM
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/05/2026 00:39)
