Mr. Chelliah Gobalakrishnan
(சங்கானை கிருஷ்ணா இரும்புத் தொழிற்சாலை, கிருஷ்ணமஹால் கட்டிட உரிமையாளர்)
Date of Birth: 18 October 1947 - Deceased: 27 February 2026
யாழ். காளிகோவிலடி சங்கானையை பிறப்படமாகவும், மாலியாவத்தை சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா கோபாலகிருஷ்ணன் அவர்கள் 27-02-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - மகேஸ்வரி தம்பதியினரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - தங்கம்மா தம்பதியினரின் இளைய மருமகனும்,
மனோஹரி (சின்னமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமியின் அன்புச் சகோதரரும்,
சதீஷ்குமார் (இலண்டன்), நந்தகுமார் (பொறியியலாளர், சிங்கப்பூர்), தர்மகுமார் (Development Officer, காரைநகர்), மஞ்சுளா (இலண்டன்), கிருஷ்ணகுமார் (இலண்டன்), சுபாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நளினி, கவிதா, ரேவதி (Development Officer - பிரதேச சபை, சுழிபுரம்), வரதராஜா, பிரமிளா, வாகீசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றோர்களான சபாரத்தினம், ஆர்.கே. சுப்பிரமணியம், ஆர்.கே. ரத்தினம், ஆர்.கே. பாலசிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமுதுனி, சஞ்சிதா, கவினயன், நயனா, வேதஸ்வின், அபிநவா, அபிலயன், தர்ணிகா, யனுரன், பிரமினா, ஹாரிஸ், அஜேஸ், ஆரிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, பாக்கியம் ஆகியோரின் பெறாமகனும்,
நாகராணி, ஆனந்தராணி, மகேந்திரன், ஶ்ரீவரதராஜா, நாகேந்திரராஜா, செந்தில்ராஜா, மதிபாலராஜா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2026 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உலாவௌி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
