திரு. செல்லையா இராசகுலேந்திரன்

(ஓய்வுநிலை பிரதி அதிபர் - மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை)

செல்லையா இராசகுலேந்திரன்

தோற்றம்: 11 மார்ச் 1947 - மறைவு: 09 அக்டோபர் 2025

யாழ். கணேஸ்வரம் அளவெட்டி வடக்கைப்  பிறப்பிடமாகவும், மணியர் வீதி கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா இராசகுலேந்திரன் அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா - செல்லமுத்து  தம்பதியினரின் ஏக புத்திரனும்,  காலஞ்சென்ற நடராசா - மங்கையற்கரசு தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்திரகாந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

இராஜகாந்த் (ஆசிரியர் - யாழ். உடுவில் மகளீர் கல்லூரி), இராஜசந்திரிகா (கனடா), இரஜனிகாந்தன் (கனடா), இராஜகாந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜசின்தினீ, சுபாகர், மயூரி, அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகராஜா (ஓய்வுநிலை மருந்தாளர்), ஸ்ரீபாலன் (கனடா), காலஞ்சென்ற சந்திரகுமாரி, சந்திரவதனா, மதிவதனா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாருகா, ஆத்மிகன், ரிஷன், சேன், ஸ்ரேயன், சேயோன், சேரன், ஆஜன், அஸ்வின் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2025 06:03)