திரு. சின்னையா கந்தசாமி
(ஓய்வுபெற்ற உதவி கணக்காளர் - McCallum Breweries (Ceylon) Ltd)
தோற்றம்: 01 ஜூலை 1944 - மறைவு: 16 ஜூலை 2026
யாழ். காரைநகர் சத்திரந்தை, களபூமியைப் பிறப்பிடமாகவும், இல- 277, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் மற்றும் இல- 129/15, கடவத்தை வீதி, நெதிமால், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா கந்தசாமி அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று களபூமி காரைநகரிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா (அப்போதிக்கிரி) - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யாதவன் (கொழும்பு), திலீபன் (பிராந்திய செயற்பாட்டு முகாமையாளர் - நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதா, கவிதா (சிரேஷ்ட விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாம்பிகை, காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சர்வானந்தம், சிவபாலன், கௌரியம்மா, சுசீலாதேவி, வில்வராஜா, காலஞ்சென்ற ரஞ்சினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
மகேஸ்வரன் (இலண்டன்), சர்வேஸ்வரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விஸ்ணுயா, றூாபினி, சிவகார்த்திக், திஷ்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6:00 மணியளவில் சத்திரந்தை, களபூமி காரைநகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை 8.00 மணியளவில் திருவுடல் தில்லை களபூமி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
