Mr. Chinnaiya Ponnuthurai Mahendra (J.P)
Date of Birth: 23 May 1948 - Deceased: 30 June 2026
யாழ். வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. S.P.மகேந்திரா அவர்கள் 30-06-2026 செவ்வாய்க் கிழமையன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற N.S.பொன்னுத்துரை - சிவபா க்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மேரியன்-அன்ரனி ராஜூ-பேர்ளி செல்வமணி ராஜூ தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்வேந்திரா, சத்தியேந்திரா, யனித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
மிருணாளினி, தாமினி, ரிகார்டோ ஆகியோரின் மாமனாரும்,
மிருத்வி, அஞ்சலி, நிட்டின் மிலான் யெலேனா, லியான்றா, ஐவன் ஆகியோரின் ஆசைமிகு பேரனும்,
காலஞ்சென்ற செல்வராஜா, யோகேந்திரா, கமலாதேவி, விமலாதேவி, சரோஜினிதேவி, விஜயேந்திரா ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற கமலாதேவி, இராஜசூரியர், சீதாதேவி, வரதராஜன், திருநாவுக்கரசு, நித்தியலக்ஷ்மி, மனோ, குமாரி, ஜெரார்ட் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
