திரு. சின்னையா இராசரத்தினம் (தவம்)
(மரக்கறி வியாபாரி - யாழ்ப்பாணம்)
தோற்றம்: 28 டிசம்பர் 1962 - மறைவு: 30 மார்ச் 2025
யாழ். உடுவில், நாகம்மாள் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா இராசரத்தினம் அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து - செல்வமணி தம்பதியினரின் மருமகனும்,
பவளராணி (பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தினி, ஜெசிந்தினி, சுகிர்தன், சுகிர்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரகுநாதன், சுதர்சன், சியாழினி, காலஞ்சென்ற ஜெனகசெல்வன் ஆகியோரின் மாமனாரும்,
ராகுல், கோகுல், அகுல், சுபர்ணன், அபிவர்ணன், வர்சானா, சாருஜன், லதுஜன், அமீத்தா, ஆரங்கா, ஆரணன், ஆராதனன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் மருதனார்மடம் பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
