திருமதி. சின்னையன் பழனியம்மா
தோற்றம்: 07 செப்டம்பர் 1949 - மறைவு: 31 மார்ச் 2026
மத்துகம சாந்த ஜோர்ஜை பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னையன் பழனியம்மா அவர்கள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையன் - லட்சுமி தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற பெருமாள் இராமையா அவர்களின் அன்பு மனைவியும்,
லோகனகுமாரின் அன்புத் தாயாரும்,
குமுதாவின் அன்பு மாமியும்,
இந்திரகுமார் (சென்னை, இந்தியா), கிருபாஷினி (சேலம், இந்தியா), சுகந்தினி, யசியந்தினி, நிலுஷன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
ராஜேஸ்வரன், நிஷாந்தினி, கிருபாதர்ஷினி, உமா சுபாஷினி, விஜி சுலக்ஷனா, குமுதா, சொந்தர் பிரகாஷ் ஆகியோரின் அன்பு அத்தையும்,
நுகன்யா ப்ரிதி, சர்வேஷ் கிரிஷ் ஆகியோரின் அப்பம்மாவும்,
காலஞ்சென்ற பழனியாண்டி, சிவபாக்கியம் (சென்னை), காலஞ்சென்றவர்களான நல்லுசாமி, தருமலிங்கம் மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,
புஷ்பலீலா, காலஞ்சென்ற சுந்தர்ராஜ் (சென்னை), முத்துலட்சுமி, சிவகுமார், காலஞ்சென்றவர்களான ராக்கன், ராமாயி, சிவசுப்ரமணியம், புல்லாச்சி ஆகியோரின் மைத்துனியும்,
மோகன்ராஜ் (வவுனியா), கோவிந்தராஜ் (நீர்கொழும்பு), சந்திரராஜ் (அத்துறை), கமலாதேவி (வவுனியா), நந்தாதேவி (மட்டக் களப்பு) ஆகியோரின் சின்னம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வத்தளை மஹிந்தா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-04-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
