Mr. Chinnanna Nadarajah

Chinnanna Nadarajah

Date of Birth: 08 September 1943 - Deceased: 20 August 2026

மாத்தளை - இரத்தொட்டயை பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னன்ணண் நடராஜா அவர்கள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னண்ணன் - மீனம்பாள் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா - அமராவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நிர்மலராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீ ரஜீவன் இன் பாசமிகு தந்தையும்,

விஜயாம்பாள். கிருஸ்ணவேணி, அன்னபூரணம், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-08-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.30 முதல் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-08-2026 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/08/2026 00:00)