திருமதி. சின்னத்தங்கம் யாதவராயர்
தோற்றம்: 17 செப்டம்பர் 1928 - மறைவு: 22 செப்டம்பர் 2025
யாழ். நெடுந்தீவு மத்தி தண்டக்காரன் வளவைப் பிறப்பிடமாகவும், இலண்டன், கனடா, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தங்கம் யாதவராயர் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு - சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி - வேலாசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யாதவராயர் (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், ஓய்வுபெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி- நெடுந்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்
சகுந்தலாதேவி, பாலச்சந்திரன், குலேந்திரன் ஆகியோரின் அன்பு தாயாரும்
கோபாலகிருஷ்ணன், இசைஞானவதி, ராணிதேவி ஆகியோரின் அன்பு மாமியும்
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், சிதம்பரபிள்ளை, நாகமுத்து (தம்பையா), கணபதிப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் சகோதரியும்
காலஞ்சென்றவர்களான இராமசிப்பிள்ளை, பார்வதி, கமலாம்பிகை, விசாலாட்சி, கண்மனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோசலா அதிரதன் , கோசகன் ஜானகி , தயாளன் பாறு, விமலன், ஜனனி மதன்ராஜ், தினெஷ்குமார் சுஜீவா, யாழினி கலைக்குமார், கமலனி ரவீந்திரா, ஜனகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
அரன், காயா, றியா, செரீனா, ஜெயன், டிலானி, கிருதிக், ஜனுசா, லக்ஷா, நேகா, டியா, நளா, மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 22/1, கச்சேரி ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
