திருமதி. சிதம்பரம் விஸ்வலிங்கம்

சிதம்பரம் விஸ்வலிங்கம்

மறைவு: 31 அக்டோபர் 2024

யாழ். கரவெட்டியினை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு பூதவராயர் வீதியினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிதம்பரம் விஸ்வலிங்கம் அவர்கள் 31-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற திருமதி. தேவராணி தர்மகுலசிங்கம் (சாந்தா), திரு. விஸ்வலிங்கம் தேவராசா, செல்வி. செல்வராணி விஸ்வலிங்கம் (சுகந்தா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திரு. தர்மகுலசிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும், 

திருமதி. கிரிஷாந்தினி தினேஷ்குமார், திருமதி. தாட்சாயினி பிரதீபன், திரு. தினேஷ்குமார், திரு. பிரதீபன் அவர்களின் பாசமிகு பேத்தியும், 

கவின், சத்திரியன், தேஜஸ்வினி  ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-11-2024 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1:00 மணி முதல் 3:00 மணி வரை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/10/2024 04:00)