Mr. Chithiravelayutham Sivakumar
Date of Birth: 04 February 1953 - Deceased: 27 May 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சித்திரவேலாயுதம் சிவகுமார் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சித்திரவேலாயுதம் - அன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற Dr. கணேஸ் - மங்கையக்கரசி தம்பதியினரின் மருமகனும்,
சந்திரகௌரி (ஓய்வுபெற்ற முகாமைத்துவ உதவியாளர், நில அளவைத் திணைக்களம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சவீதா (முகாமையாளர் - இலங்கை வங்கி, சீனக்குடா), ஹரிபிரசாத் (வைத்திய நிபுணர் - கிண்ணியா வைத்தியசாலை), அருண் பிரசாத் (முகாமையாளர் - இலங்கை வங்கி, மொரவெவ), சுவேதிகா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - தொழில் துறை திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜச்செல்வன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் - மாவட்ட செயலகம், திருகோணமலை) ஜதனி (வைத்தியர் - PGIM, கொழும்பு), தனுஷா (இலங்கை வங்கி, கிழக்கு மாகாண அலுவலகம்), ஆதித்தன் (தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், கொழும்பு) ஆகியோரின் மாமனாரும்,
அஷ்வின், ஆதிரா, அக்சதன், ஆதீசன் ஆகியோரின் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான ராசலச்சுமி, சுகுமார் மற்றும் சாந்தகுமார், Dr. சாந்தினி (இலண்டன்) ஆகியோரின் சகோதரனும்,
முரளிதரன், காலஞ்சென்ற கங்காதரன், வித்தியாதரன், Dr. ஸ்ரீதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் (இல- 38/5, 2ஆம் ஒழுங்கை, சுமேதகம, திருகோணமலையில்) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்துப் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
