திருமதி. சித்திரவேல் கமலாட்சி அம்மாள்

சித்திரவேல் கமலாட்சி அம்மாள்

தோற்றம்: 08 டிசம்பர் 1944 - மறைவு: 19 மே 2026

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், இல- 163, பிரிட்ஜ் லேன் சிட்டி, கொச்சிக்கடை, நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சித்திரவேல் கமலாட்சி அம்மாள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லசாமி செட்டியார் தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற சித்திரவேல் செட்டியார் அவர்களின் மனைவியும்,

கதிரேசன், பிரபாவதி, நாகேந்திரன், எதிர்மான சிங்கம், காலஞ்சென்ற பூவலிங்கம், பூர்ணலக்ஷ்மி ஆகியோரின் சகோதரியும்,

கௌரி அம்பாள், ரமேஷ்பாபு, அரிஸ்பாபு (இலண்டன்), இசக்கிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரன், ஷியாமலி, ஜெனகன் ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

யொவின், பிரவீன், இதாரணி, இஷாரணி, பவித்ரா, மாருதீஷன், சதுர்புஜன், அபிநேஷ்வரன், அஞ்சனா, கபீஷன், அஞ்ஜனி, சஞ்சீவன் ஆகியோரின் பாட்டியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2026 00:00)