திரு. கிறிஸ்ரியன் விஜயநாதன் பொனிபஸ்
தோற்றம்: 18 மார்ச் 1951 - மறைவு: 22 மே 2026
“நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா, நீர் இவர் பரிசாய் இருந்தருளும்.”
யாழ். கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிறிஸ்ரியன் விஜயநாதன் பொனிபஸ் அவர்கள் 22-05-2026, வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கரம்பொன் (குறக்காடு) சவரிமுத்து பொனிபஸ் - திரேசம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்ற பீற்றர் - திரேசா தம்பதியினரின் (அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய பங்கு) அன்பு மருமகனும்,
கிறேசியா றாஜினியின் ஆசைக் கணவரும்,
டிலான், மைக் மற்றும் ஜோ ஆகியோரின் வாஞ்சை மிகு தந்தையும்,
சோனியாவின் அன்பு மாமனாரும்,
அனயாவின் ஆசைத்தாத்தாவும்,
அலிஸ்ரன் அருமைநாயகம் (Retired - Jaffna District Regional Manager of Bank of Ceylon), மேரி ஜஸ்ரினா பீற்றர்பிள்ளை, எல்சி வலன்ரினா அருள்றாஜ், மற்றும் காலஞ்சென்ற ஜோசப் ஜெகநாதனின் பாசமிகு சகோதரனும்,
வனஜா, ரஞ்சினி, பீற்றர்பிள்ளை, அருள்றாஜ், சலிற்ரா, றெனி, றொகான், றுகுணா, றேவதி, றமேஷ், றஞ்சி மற்றும் றேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2026 புதன்கிழமை மற்றும் 28-05-2026 வியாழக்கிழமை பிற்பகல் 15:00 - 17:30 (French time) Maison Funéraire De Courcouronnes (02 Impasse du Rondeau,91000 evry Courcouronnes ) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 29-05-2026 வௌ்ளிக்கிழமை பிற்பகல் 15:00 (French time) மணியளவில் Église sacré cœur (36 rue pierre brossolette 91130) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மாலை 16:30 மணியளவில் Cimetière intercommunal (Rue désir Prévost 91070 bondoufle) இல் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
