திருமதி. கிறிஸ்டினா மார்த்தா பிலிப் ஜோசப் (ராணி)

(ஓய்வு பெற்ற ப.நோ.கூ.சங்க முகாமையாளர்)

கிறிஸ்டினா மார்த்தா பிலிப் ஜோசப் (ராணி)

தோற்றம்: 30 அக்டோபர் 1954 - மறைவு: 18 மே 2026

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், செல்வநாயகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிறிஸ்டினா மார்த்தா பிலிப் ஜோசப் அவர்கள் 18-05-2026 அன்று திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான டேவிட் அன்டனி - மரியதிரேசா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்ட்டின் ஜோசப் - அந்தோனியம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கிறிஸ்டினா மார்த்தாவின் பெறாமகளும்,

காலஞ்சென்ற பிலிப் ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,

பீட்டர் அன்டனி, காலஞ்சென்றவர்களான போல் அன்டனி, ஜோன் அன்டனி, மற்றும் ஜேம்ஸ் இயூஜின் அன்டனி, மத்தியு அன்டனி, பிலிப் அன்டனி, காலஞ்சென்ற மேரிமார்க்கிரட், பற்றிக் அன்டனி, மேரிஎலிசபெத், அன்ரூ அன்டனி ரீட்டா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜூலியட் ஜோசப், றெஜினோல்ட் கெஷியன், காலஞ்சென்றவர்களான ஜோர்ஜியானா, பேனாட் மற்றும் ஏர்சலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மில்ரட் ஹெலன், தோமஸ் பிலிப், பிலிசியா அனட் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

காலஞ்சென்ற அன்டன் யூட், லக்ஷ்மி, எட்வட் கெனடி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லிஷான் ஜோசப்பின் அன்பு அப்பம்மாவும்,

பேடினன் நெமோரியஸ், டொனேட்டஸ், ஹெய்டன், ஹெலேனா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நல்லடக்கத் திருப்பலி 21-05-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் செல்வநாயகபுரம் புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டு, சரீரம் அலஸ்தோட்டம் றோமன் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

+94 11 26 222 0540

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/05/2026 00:00)