Mrs. Cicelia Daisy Kumarasamy
Date of Birth: 31 March 1931 - Deceased: 11 August 2024
யாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மன்னார், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிசிலியா டெய்சி குமாரசாமி அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், பற்றிக் பொன்னையா-மரிய மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,
அண்ணாமலை குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி மரியம்பிள்ளை, மகேஸ்வரி பத்திநாதன் (மன்னார்), பிரான்சிஸ் ராஜேந்திரன் குமாரசாமி (மன்னார்), யோகேஸ்வரி மரியதாசன், பாலேந்திரன் குமாரசாமி, லோகேந்திரன் குமாரசாமி, ஈஸ்வரி மரியதாசன், ரவீந்திரன் குமாரசாமி (கொழும்பு), ரட்னேஸ்வரி ஞானப்பிரகாசம், ஜூட் குமாரசாமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜோர்ஜ் அருமைநாயகம், கிரேஸ் செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், 17-08-2024 சனிக்கிழமை காலை 8.00-9.00 மணி வரையும் DeMarco Funeral Home (Keele Chapel) Inc. 3725 Keele St, North York, ON M3J 1N4, Canada இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 9.30 மணியவில் St. Jane Frances 2747 Jane St, North York, ON M3L 2E8, Canada இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் Beechwood Cemetery 7241 Jane St, Concord, ON L4K 1A7, Canada இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
